குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

குமுதினி, எல்லாமே அற்புதங்கள்.

குமுதினியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்டு ஒரு பெண் எழுதியிருந்தார். ‘குமுனிதிக்கு 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச ஐயங்காருடன் மணம் நிகழ்ந்தது. கணவனின் ஆதரவில் இலக்கியங்களை வாசித்தார். அவருக்கு இளமையில் ஒரு காய்ச்சல் வந்தபின்...

எம்.சி.மதுரைப் பிள்ளை,முன்னோடிகளில் ஒரு முகம்

தமிழகத்தில் தலித் அரசியலையும் தலித் அறிவியக்கத்தையும் உருவாக்கிய முன்னோடிகளைச் சீராக பதிவுசெய்ய தமிழ் விக்கி முயல்கிறது. முக்கியமாக கவனமாகப்போடப்படும் இணைப்புகள் வழியாக ஓர் ஆளுமைக்குள் நுழையும் ஒருவர் ஆர்வமிருந்தால் ஒட்டுமொத்த வரலாற்றையும் வாசித்துவிடவேண்டும்...

ஆனந்தரங்கம் பிள்ளை, வரலாற்றில் வாழ்தல்

ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய இந்த விக்கி குறிப்பு உண்மையில் ஒரு குறுநாவல் போல வாசிக்கத்தக்கது. ஆனந்தரங்கம் பிள்ளை எந்த சாகசமும் செய்யவில்லை. அவர் உண்மையில் ஒரு அதிகாரி. எல்லா உயரதிகாரிகளையும்போல ’சைடுபிசினஸ்’ செய்தவர்....

எம்.எஸ்.கமலா, மறதி எனும் அரசியல்

தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு ஏன் மிகக் குறைவாக இருக்கிறது? ஆனால் இந்த கேள்வியே ஒருவகையில் பிழையானது. தமிழிலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக பதிவாகியிருக்கிறது. பல காரணங்கள். முதன்மையானது நம் பொதுவிவாதக்களத்திற்கு...

ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு விழா

  தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு நிறைவை ஒட்டி ஒரு நினைவுமலரை மரபின் மைந்தன் முத்தையா அவருடைய நமது நம்பிக்கை இதழ் சார்பில் வெளியிடுகிறார். ம.ரா.போ குறித்த கட்டுரைகளை எதிர்பார்க்கிறார். marabinmaindan@gmail.com ம.ரா.போ.குருசாமி - தமிழ் விக்கி

ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை இயக்கத் தலைமகன்

தமிழியக்கத்தின் முன்னோடிகள் பலருக்கு அரசு சார்ந்த நினைவகங்கள் உள்ளன. பலவகையான ஆய்வரங்குகளும் நூல்களும் உள்ளன. பின்னர் வந்த சாதாரணமான தமிழறிஞர்களுக்கே சிலைகள் உள்ளன. ஆனால் தமிழிசை இயக்கத்தின் தலைமகன் என்று சொல்லத்தக்க தஞ்சை...

ஆறுமுகப்பெருமாள் நாடார், நாட்டாரியல் உ.வே.சா.

1998 முதல் அ.கா.பெருமாள் அவர்களை அனேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அ.கா.பெருமாளின் பேச்சில் வந்துகொண்டே இருக்கும் பெயர்களில் ஒன்று ஆறுமுகப்பெருமாள் நாடார். ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருந்தபோது ஆவேசமாக “உ.வே.சாவை மட்டுமே போற்றுறோம்...  ஆறுமுகப்பெருமாள்...

சயாம் மரண ரயில்பாதை – ஒரு பெருங்கதை

அன்புள்ள ஜெ கோ.புண்ணியவான் பதிவு வழியாகச் சென்று கையறு வழியாக சயாம் மரண ரயில்பாதை என்ற பதிவை அடைந்தேன். இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அத்தனை ஹைப்பர் லிங்குகளையும் படித்து முடிக்கையில் காலை...

எஸ்.ராமகிருஷ்ணன்,நூறு கதைகள்-கடிதம்

எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தமிழ் விக்கி தளத்தின் பல பக்கங்களை அவ்வப்போது வாசித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவை எண்ணிலடங்கா முறை பயன்படுத்தியிருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா வாசிக்க நேரவில்லை....

அறம்

விக்கி கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்கையில் ஒரு இடர் எழுந்து வந்தது. அறம், கற்பு போன்ற சொற்களை எப்படி மொழியாக்கம் செய்வது? மொழியாக்கம் செய்யும் சுசித்ரா அவற்றை அப்படியே பயன்படுத்தலாம் என்ற கருத்தை...