Daily Archive: May 24, 2020

மலைகள் அங்கேயே…

பித்திசைவு செங்கோலின் கீழ் சின்னஞ்சிறு வெளி மீண்டும் காலைநடை செல்லத் தொடங்கி விட்டிருக்கிறேன். ஏறத்தாழ அறுபத்தைந்து நாட்களுக்கு பிறகு. காலைநடை செல்லலாம் என்று ஆனபிறகுகூட பலநாட்கள் தயங்கிக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அவசியமானதாக தெரியவில்லை. மொட்டைமாடி நடையே இனியதாக ஆகிவிட்டிருந்தது திடீரென்று மலைகள் நினைவுக்கு வந்தன. இங்கே வேளிமலை அடுக்குகள் மழைக்காலத்தில் மிக அழகாக முகில்சூடி தென்படும். இந்த முகிலை மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணமுடியும் என்கிறார்கள். இது வான்முகில் அல்ல. நிலத்திலிருந்து எழும் நீராவி வானில் குளிர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132011/

நிறைவு -கடிதங்கள்

ஜெ நிறைவு. நிறைவன்றி வேறில்லை. முதல் சொட்டு விழும் போதே பாத்திரம் நிறைக்கத்தான். ஆனால் எப்போதும் கடைசிச் சொட்டு ஒரு துக்கமே. அது துக்கமாக நாலாபுறமும் தெறித்து ஆவியாகிவிடுகிறது. அந்த ஆவியாகி மறைகணத்தை சொட்டு விழப்பெற்றவன் உணர்ந்தால் ஒரு நொடி சிலிர்ப்பு அல்லது ஆனந்தம்.  – நீங்கள் அந்த மூன்று பறவைகளில் குறிப்பிடுவது போல, நிறைவு என்பது கூட ‘ஒரு சரியாகச் சமைக்கப்பட்ட துன்பம்’ தான். நீங்கள் தேனீ கதையை எழுதிய போதே, அனேகமாக நிறைவை நெருங்கிவிட்டீர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132016/

குருவிகள் – கடிதங்கள்

மூன்று வருகைகள். மூன்று டைனோசர்கள் மூன்று பறவைகள் எஞ்சும் கூடு அன்புள்ள ஜெ அந்தக்குருவியின் வருகைக்கும் உங்கள் எழுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கிறது. இந்த எழுத்துக்கொண்டாட்டத்திற்கும் அதற்கும் ஒரு இணைப்பை உங்கள் மனசில் உருவாக்கிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். அல்லது அதை ஒரு நிமித்தமாக உங்கள் மனம் எடுத்துக்கொண்டிருக்கிறது இந்தக் கதைகளின் விதவிதமான உலகங்கள் ,நூற்றுக்கணக்கான செய்திகள், உணர்ச்சித்தருணங்கள், ஒவ்வொரு முறையும் மிகச்சரியாக இது ஒரு அபூர்வமான கவித்துவத்தைச் சென்றடைவது, அதன்பின் திரும்பிப்பார்த்தால் எல்லா கதைகளுமே அந்த முடிவுக்குரிய ஒத்திசைவைக் கொண்டிருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132009/

ஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்

ஆகாயம் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஆகாயம் கதையை வாசிக்கையில் எங்கே செல்கிறது கதை என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை பேசப்பட்ட பாணி கதையே அல்ல. ஆனால் இந்த தொடரில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கிரியேட்டிவிட்டி பற்றிய கதை. காதும் நாவும் இல்லாதவன் செய்த சிலை என்பதே குறியீடுதான். அவனால் அந்தக் கலையை விளக்க முடியாது- அந்தவகையில் பெரும்பாலான கலைஞர்கள் விளக்கத்தெரியாதவர்கள்தான். கலை நிகழ்ந்துவிடுகிறது. இனி அதை என்ன செய்வது? எப்படி பயன்படுத்துவது? சமூகத்திற்கு இதனால் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131964/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–71

பகுதி ஆறு : படைப்புல் – 15 தந்தையே, அங்கு நிகழ்ந்ததை நான் எவ்வகையிலும் விளக்கிவிட இயலாது. சற்று நேரத்திலேயே அங்கு யாதவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள் என்று ஒற்றை வரியில் கூறி முடிப்பதே உகந்ததாக இருக்கும். எனினும் எண்ணி எண்ணி எடுத்து, சொல் சொல்லெனக் கோத்து, அதை நிகழ்த்தாமல் இருக்க முடியவில்லை. நூறு முறை ஆயிரம் முறை என் உள்ளத்தில் அக்காட்சிகளை மீண்டும் விரித்துக்கொண்டேன். இங்கு தேடிவரும் இந்நீண்ட பயணத்தில் என் உள்ளத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132005/