Daily Archive: May 21, 2020

ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன.பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன அவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131821/

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த ஆவேசமான கதைவேள்வியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் முதலில் ஆச்சரியம் எழுகிறது. இந்த வெறிகொண்ட எழுத்து. இதைப்பற்றி பேசிக்கொண்டபோது என் அமெரிக்க நண்பன் உலக அளவிலேயே பெரிய எழுத்தாளர்கள்- உண்மையிலேயே முக்கியமானவர்கள்- இப்படி எழுதித்தள்ளிவர்கள்தான் என்றார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதிக்குவித்தார்கள். சிலர் சட்டென்று அமைதியாகிவிட்டார்கள். சிலர் கடைசிவரை அதே வெறியுடன் எழுதினார்கள். குறிப்பாக டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, பால்ஸாக், தாமஸ்மன் என்று பலபேர். இத்தனைக்கும் இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் நவீன வசதிகளெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131595/

கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்

சிவம் [சிறுகதை] கூடு [சிறுகதை] அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது, ஆர்வம் மிகுந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மூச்சில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எதை ஒன்றையுமே தொடங்கும் முன்னமே அடுத்த தேர்வை செய்து அதற்குள் நுழைவது, போன்ற பழக்கங்களால் மனமும் உடலும் சோர்ந்திருந்தது, அன்றாட செயல்பாடுகள் மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131590/

முதுநாவல், பிறசண்டு- கடிதங்கள்

முதுநாவல்[சிறுகதை] அன்புள்ள ஜெ ஓஷோ ஓர் உரையில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறார். ஏன் பெரிய ரவுடிகள் கேடிகள் முதலியவர்கள் திடீரென்று துறவிகளும் செயிண்டுகளும் ஆகிவிடுகிறார்கள்?அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள்? அதற்கு ஓஷோ சொன்ன பதில் இது. மனிதனுக்குள் இருப்பது ‘எலிமெண்டல் பவர்’ ஆற்றல் என்பது ஒன்றுதான். அதுதான் அறிவாற்றல் கற்பனை ஆற்றல் ஆன்மீகமான ஆற்றல் எல்லாமே. அது ஒரு மடைவழியாக வெளியே வரும்போது கிரைம். இன்னொன்றிலே கிரியேட்டிவிட்டி. இன்னொன்றிலே விஸ்டம். எப்போது எந்த மடை …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131777/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–68

பகுதி ஆறு : படைப்புல் – 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக!” இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131812/