Daily Archive: May 20, 2020

தேனீ [சிறுகதை]

சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும். அது சுசீந்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131744/

கூடு, தேவி- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ   கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான objectiveness உள்ளது. அது வேறு ஒரு அனுபவம். இதிலுள்ளது subjectiveness இது அந்தக்கதைக்குள் ஒரு கதாபாத்திரம் செய்யும் பயணம். ஆகவே அவருடைய மனநிலைக்கு ஏற்ப ஒருவகையான குறியீட்டு அர்த்தமும் உணர்ச்சிகளும் வந்துவிடுகிறது கதையில் அந்தக்கதாபாத்திரம் ஆன்மீகமாக பயனம் செய்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131497/

நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை நடிக்கிறது. நிழல்நாய் கடிக்காது, ஆனால் அதனுடன் விளையாடலாம். கலையில் உள்ள காமம் பகை எதையும் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது ஒருவகை நடிப்புதான். ஆனால் பொய் அல்ல. அன்பால் நீதியால் அப்படி மாற்றி நடிக்கப்படுகிறது அது. அதைத்தான் கதை சொல்கிறது. தத்துவ …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131550/

கரு, இணைவு- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 2 கரு [குறுநாவல்]- பகுதி 1 அன்புள்ள ஜெ கரு நாவல் இன்று மறைந்துபோய்விட்ட ஒரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. எண்பதுகளில் நான் மதுரை தியோசஃபிக்கல் நூலகத்தில் நிறைய வாசிப்பேன். நான் அப்போது பார்த்த பலநூறு புத்தகங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அந்தப்புத்தகங்கள் இன்றைக்கு அழிந்திருக்கலாம். அவையெல்லாமே தாந்திரீகம், யோகம், மறைச்சடங்குகள் ஆகியவற்றைச் சார்ந்தவை. அவை இன்றைக்கு பொருத்தமில்லாதவையாகக் கூட இருக்கின்றன. ஆனால் மர்மங்களையும் மறைக்கப்பட்ட ஞானத்தையும் தேடி அலைந்த மனிதர்களால் ஆன ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131724/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–67

பகுதி ஆறு : படைப்புல் – 11 பிரஃபாச க்ஷேத்ரத்தில் மிக விரைவாக குடில்கள் அமைந்தன. அத்தகைய ஒரு நிலத்தில் யாதவர்கள் எவரும் அதற்கு முன் குடியேறியதில்லை. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே துவாரகையில் பிறந்து வளர்ந்தவர்கள். முதியவர்களோ வடக்கே செழித்த புல்வெளிகளிலும், மதுவனம், மதுராபுரி போன்ற அரசு நிலைத்த நகர்களிலும் பிறந்தவர்கள். ஒரு கடலோரச் சதுப்பு நிலத்தில் குடில் கட்டி நகர் அமைக்கும் பயிற்சியை அவர்கள் எங்கிருந்தும் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆணையிடாமலேயே ஒவ்வொருவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. நூற்றுக்கணக்கான …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131720/