Daily Archive: May 19, 2020

முதுநாவல்[சிறுகதை]

இது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாறசாலை ஊரின் அந்திச்சந்தையின் தெற்கு வாசலில் உச்சிகடந்த பொழுதில் ஓர் ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. அதிலிருந்து இடும்பன் நாராயணன் என்ற பெயர்கொண்ட ஏட்டு இறங்கி நின்று உரத்த குரலில் “எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர்? அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131679/

கரு- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 ஜெ, எளிதில் வாசித்துவிடக்கூடிய ஒரு கதை அல்ல கரு. அது அடிப்படையில் மெட்டஃபிசிக்கலான ஒரு படைப்பு. ஒரு தனிப்பட்ட ஆன்மிகக் கனவை வெளியே ஏதேனும் வழியில் சொல்லிவிடமுடியுமா என்ற முயற்சி. அதற்கு நீங்கள் இவ்வளவு அப்ஜெக்டிவான செய்திகளை ஏன் அளிக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன். ஒரே காரணம்தான் தட்டுப்பட்டது. இது சப்ஜெக்டிவானது. மிகமிக அந்தரங்கமானது. இதை நீங்கள் வெளியே சொன்னால் ஒரு அசட்டுக்கனவாகவோ வேடிக்கையாகவோ ஆகிவிடும். …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131689/

நற்றுணை ,கூடு- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ கூடு கதை வாழ்க்கையின் ஒரு வடிவம். அதை நான் ஆன்மிகமான விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. பல வாழ்க்கைகளே அப்படித்தான். என் தாத்தா தஞ்சையில் கட்டிய வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்தார்கள். மொத்தம் இருபத்திரண்டு அறைகள். கல்யாணமண்டபமாக இருபது ஆண்டுகள் இருந்தது. பாழடைந்து பத்தாண்டுகள் கிடந்தது. அவர் வக்கீலாக இருந்தார். அன்றைக்கு அத்தனை அறைகளிலும் ஆளிருந்தார்கள். எதிர்த்த வீட்டை வாங்கி கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வைத்திருந்தார். அவருடைய சைஸ் அந்த வீடு. …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131488/

நிழல்காகம்,தேவி- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி ஒரு கொண்டாட்டமான கதை. சரளமான நகைச்சுவையுடன் ஆரம்பித்து முதிர்ந்தபடியே சென்று ஒர் உணர்ச்சிநிலையில் முடிகிறது. மொத்த நாடகத்தையுமே ஸ்ரீதேவி மாற்றியமைக்கிறார். அவரே அதை நடித்து வெற்றிகரமாக ஆக்குகிறார். ஆனால் புகழ் முழுக்க அனந்தனுக்கு. அவனை பாராட்டித்தள்ளுகிறார்கள். அவனுக்கே அது அவனுடைய வெற்றி அல்ல என்று தெரியவில்லை. ஸ்ரீதேவி மூன்றுவேடங்களில் நடித்ததனால் அவருடைய உண்மையான திறமையைக்கூட ஊர்க்காரர்கள் உணரவில்லை. சொல்லப்போனால் அனந்தன், லாரன்ஸ் தவிர எவருக்குமே அது ஸ்ரீதேவியின் வெற்றி என்று …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131551/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–66

பகுதி ஆறு : படைப்புல் – 10 பிரஃபாச க்ஷேத்ரத்தின் தென்கிழக்கு எல்லையென அமைந்த மண்மேட்டை அடைந்து மேலேறத் தொடங்கியதும் அனைவரும் தயங்கினர். அதுவரை உள்ளம் எழுந்து எழுந்து முன்செலுத்திக்கொண்டிருந்தது. மேடேறுவதன் சுமையால் மூச்சு இறுகி உடல் களைத்தபோது உள்ளமும் தளர்ந்தது. முன்னால் சென்றவர்கள் தயங்க பின்னால் சென்றவர்கள் வந்துகொண்டிருக்க அந்தத் திரள் தன்னைத்தானே முட்டிச் சுழித்து பக்கவாட்டில் விரித்துக்கொண்டது. இருளுக்குள் நீர் வந்து நிறைவதுபோல அம்மேட்டை கீழிருந்து நிரப்பி முடி வரை சென்றோம். அதன் மேற்குச்சரிவு …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131694/