Daily Archive: May 17, 2020

பொன்னீலன்

  பொன்னீலன் இதயத்தில் ஓர் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் மகளும் மனைவியும் உடனுள்ளனர். சிலநாட்களில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்படும். பெரிய சிக்கல் ஏதுமில்லை. சென்றசில நாட்களில் அவர் ஒருசிலரால் கடுமையாக வசைபாடப்பட்டு துன்புற்றார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய இயல்புக்கு அந்த வசைபாடல்களை அவர் கொஞ்சம் உணர்ச்சிகரமாகவே எடுத்துக்கொள்வார். அவருடைய கட்சிiநண்பர்கள், முகநூல் மார்க்ஸியர் பலரே அவரை அத்துமீறி தாக்கினார்கள் என்றும் அதில் ஒருசாராரிடம் மதவெறியே மிகுந்திருந்தது என்றும் கேள்விப்பட்டேன் அதற்குக் காரணமாக அமைந்தது கல்கியில் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131555/

‘பிறசண்டு’ [சிறுகதை]

  “அப்பன் பாத்து வரணும்… வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான் “பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு…” “விளுந்திருவீக” “நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்… ” அவர் அவன் தோளை பிடித்துக்கொண்டார். வெயில் ஏறியிருந்தது. கண்கள் கூசின. “லே அந்த கிளாஸை எடுலே” “இருங்க”என்றான். டிரைவரிடம் “முருகேசன் அண்ணா, அந்த டாஷ்போர்டிலே ஒரு கூலர் கெடக்கு எடுங்க” என்றான் முருகேசன் அதை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். அதை கண்ணாடிக்குமேலே …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131535/

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 அன்புள்ள ஜெயமோகன், கரு மீண்டும் ஒரு அற்புதமான தாவல். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்ட ஓர் உலகம் என்பதனால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். இன்னொரு முறை வாசித்தபிறகுதான் முழுமையாகச் சொல்லமுடியும் என நினைக்கிறேன். முதலில் ஒரு குறிப்பிட்ட அறிவுலகை அறிமுகம் செய்கிறீர்கள். அதிலுள்ள மயக்கங்கள், குழப்பங்கள், கற்பனைகள் ஆகியவற்றுடன்.லாப்சங் ராம்பா போன்ற பாப்புலர் எழுத்தாளரை உருவாக்கியது அந்த கனவுலகம்தான்.அந்த கனவுலகுக்கும் இன்றைய திபெத்துக்குமான உறவையும் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131581/

கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ.. நிகர்நிலை அனுபவம் அளிக்கவல்ல எழுத்தின் உச்சகட்ட சாத்தியங்களை கதைகளில் பார்ப்பது பிரமிப்பாக இருக்கிறது சிவம் கதையில் , சிதையில் வேகும் பிணமாக என்னையே எண்ணற்றமுறை உணர்ந்து விட்டேன் இந்த கதைகளுக்கு வரும் கடிதங்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன. இதுபோன்ற எண்ணிக்கையிலான பிரமாண்ட , காத்திரமான,கூட்டு வாசிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதல்முறை என எண்ணுகிறேன் இதற்கு வரும் வாசகர் கடிதங்களைப் படிப்பதே ஒரு பெரிய பணியாக இருக்கும் என நினைக்கிறேன் முகநூலில் சில …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131477/

மூன்று டைனோசர்கள்-கடிதங்கள்

மூன்று டைனோசர்கள் அன்புள்ள ஜெ. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. பறவைகள் வீடுகளுக்குள் கூடு கட்டியது போல எங்கள் வீட்டின் பின் வாசற் கரையில் பட்ட கமுக மரம் ஒன்று இருந்தது.  அதன் நடுப்பக்க பொந்தினுள் ஒரு பெரிய வகைக் கரிக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. தாய்க்குருவி உணவூட்டுவது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். அதைப் பார்த்துவிட்டே குளிக்கப்போவேன். கீழேயுள்ள புகைப்படத்தைக் குஞ்சு வளர்ந்த நாட்களில் எடுத்திருந்தேன். எனக்குப் பயம் என்னவென்றால் இரண்டு பூனைகள் கீழே சுற்றிக்கொண்டு திரிந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131578/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64

பகுதி ஆறு : படைப்புல் – 8 பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு அடிபணிந்தவர்கள்போல சென்றனர். திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர் என்ற ஒன்று உருவாகிவிட்டதுபோல் தோன்றியது. அந்தப் பெருக்கு ஒரு பாம்புபோல் ஒற்றை உடலாக மாறியது. சரிவுகளில் நெளிந்திறங்கியது. மேடுகளில் சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131548/