Daily Archive: May 16, 2020

கரு [குறுநாவல்]- பகுதி 2

கரு [குறுநாவல்]- பகுதி 1 –  தொடர்ச்சி…. முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான். சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131519/

கரு [குறுநாவல்]- பகுதி 1

மழை நிலைக்காமல் வீசியறைந்து யூகலிப்டஸ் மரங்களை சுழற்றியடித்துக் கொண்டிருந்த இரவில், கண்ணாடிச் சன்னல்களுக்கு உள்ளே, குளிருக்கு கம்பிளிகளை போர்த்தியபடி அமர்ந்திருந்தபோது சுவாமி முக்தானந்தா சொன்னார். “நேற்று நான் டாக்டர் ரிதுபர்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் உடலில் அத்தனை நோய்களுக்கும் முதல்விதைகள் உள்ளன என்று. அவை உறங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது இன்னொன்றால் சமன்செய்யப்பட்டுள்ளன. அல்லது நம் உடலால் கட்டி வைக்கப்படுகின்றன. நோய் என்பது அதிலொன்று முளைப்பதே.” “நான் அவரிடம் கேட்டேன். ‘அப்படியென்றால் சாவும் அப்படி மனித உடலில் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131428/

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி உற்சாகமான ஒரு கதை. ஒருவகையில் இது ஒரு Coming of age கதை என்று சொல்லலாம். லாரன்ஸின் முதிர்ச்சியின் கதை. அவனுக்கு முதலில் பெண் என்பவள் ஒரு வெறும் உடல்தான். காமம்தான் அவனை செலுத்துகிறது. அவன் தேடுவது ஹீரோயினைத்தான். ஆனால் ஸ்ரீதேவி வந்து முப்பெரும்தேவியராக மேடையில் தோன்றுகிறாள். காதலி அம்மா வில்லி என மூன்று முகம். அப்படியே சூழ்ந்துகொள்கிறாள். அவளை ஒன்றுக்குள் ஒன்றாகவே அவன் பார்க்கிறான். காதலியில் அம்மாவும் வில்லியும். வில்லியில் அம்மாவும் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131486/

கூடு,பலிக்கல்- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேஷ் சென்றிருந்தபோது அங்கே மகரிஷி மகேஷ் யோகியின் பழைமையான ஆசிரமம்- கம்யூன் கைவிடப்பட்டு கிடப்பதை கண்டேன். இடிபாடுகள். குட்டிச்சுவர்கள். அவற்றிலிருந்த ஓவியங்கள் திகைப்பூட்டின. அற்புதமனா பல ஓவியங்கள் அழிந்து கிடந்தன அதைப்பற்றி விசாரித்தேன். மகேஷ் யோகி எழுபதுகளில் ரிஷிகேஷில் அந்த இண்டர்நாஷனல் கம்யூனை உருவாக்கினார். உலகம் முழுக்க இருந்து ஹிப்பிகளும் யோகம் பயில்பவர்களும் அங்கே வந்தார்கள். அது விரிந்துகொண்டே சென்றது. அங்கே இசைக்கலைஞர்கள் ஓவியர்கள் எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131484/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–63

பகுதி ஆறு : படைப்புல் – 7  பிரத்யும்னனை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்த கிருதவர்மனிடம் நான் “தந்தையே, தாங்கள் நேரில் செல்லத்தான் வேண்டுமா? ஒரு சொல்லில் ஆணையிட்டால் போதுமல்லவா?” என்றேன். அவர் “அல்ல, அன்று அவர்கள் இருந்த உளநிலை வேறு. இன்று ஒவ்வொருவரும் நகரிழந்த நிலையில் இருக்கிறார்கள். ஒரு நகருள் திகழும் நெறிகள் அந்நகரைவிட்டு வெளியேறியதுமே மறைந்துவிடுகின்றன. ஓர் இல்லத்தில் வாழ்பவர்கள் அதைவிட்டு வெளியேறி தெருவில் வாழத்தொடங்கினால் ஓரிரு நாட்களிலேயே நாடோடிகளின் இயல்பை கொள்வதை நீ பார்க்கலாம்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131504/