Daily Archive: May 14, 2020

லாசர் [சிறுகதை ]

”என்னலே அது?” என்றபடி ஜான்சன் ஓடி அருகே வந்தான். லாசர் அதை உடனே மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டான். “ஏலே என்னலே அது? ஏலே சொல்லுலே” என்றான் ஜான்சன். லாஸர் அதை அவனிடமிருந்து எப்படி மறைப்பது என்று தெரியாமல் “ஒண்ணுமில்லே” என்றான். அவன் முகமும் உடலும் எல்லாவற்றையும் காட்டின. அவன் பதறிப்போயிருந்தான். “என்னவாக்கும்?” என்றபடி ஜான்சன் அருகே அமர்ந்தான். “பைசாவா? பைசாவாலே?” அவன் குரல் தழைந்தது. “பைசான்னா ஆருகிட்டையும் சொல்லாண்டாம். நாம ரெண்டுபேரும் எடுத்துக்கிடுவோம்… திருச்செந்தூருக்கு போவோம்…அங்க கடல் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/129455/

ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்

ஐந்து நெருப்பு[ சிறுகதை] அன்புள்ள ஜெ ஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள் வந்த வழியைச் சொல்வதில்லை. ஆனால் தீரவிசாரித்துப் பார்த்தால் மனம் கொந்தளிக்கவைக்கும் பலவிஷயங்கள் தெரியவரும். இந்தக் கதையில் வருவதுபோல மூன்றுபக்கம் நெருப்பு. ஆகவே முள்ளில் குதிக்கிறார்கள் மிக மிக யதார்த்தமான கதை. ஆனால் கதை வாசித்து பலநாட்களுக்கு பிறகு முள்மேல் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131373/

கூடு,சிவம்- கடிதங்கள்

சிவம் [சிறுகதை] அன்புள்ள ஜெ சிவம் ஒரு தத்துவார்த்தமான விளையாட்டை ஆடுகிறது. அன்பே சிவம் என்ற வார்த்தையின்மேல் அத்வைதியின் பகடியுடன் ஆரம்பிக்கிறது. அன்பை தூக்கி எவர் மண்டையிலும் போடலாம். தலைமுறைதலைமுறையாக பூசை அபிசேகம் செய்யப்பட்டு மழமழவென்று ஆனது. தேவை என்றால் மனிதன் அதன்மேல் ஏறிநின்று வேறு தெய்வத்தை தொழவும் தயங்கமாட்டான். அந்த  ‘சிவம்’ பற்றிய கதை இது. ஜலசமாதி ஆகும் அந்த சாமியாரும் அன்பை கங்கையில் இருந்து எடுத்து வைத்து பூசை செய்பவர். சிவோகம், அன்பே நான் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131444/

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல்[சிறுகதை] அன்புள்ள ஜெ, பலிபீடம் நெஞ்சை கனக்கவைத்த கதை. மனித வரலாறு தோன்றிய நாள் முதல் மனிதன் கேட்டுக்கொள்ளும் கேள்வி- இங்கே நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றுதான். இல்லவே இல்லை என்றுதான் பாதிப்பெர் சொல்வார்கள். சரி, அப்படியென்றால் நீ எதை நம்பி வாழ்கிறாய், நீதி வேண்டும் என்று எவரிடமும் நீ கேட்டதே இல்லையா என்று கேட்டால் விழிப்பார்கள். எப்படியும் ஒருவாரத்திற்கு ஒருமுறையாவது நாம் நீதி வேண்டும் என்று கேட்கிறோம். இது நீதி இல்லை என்று குமுறுகிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131375/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61

பகுதி ஆறு : படைப்புல் – 5 துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான படைசூழ்கை அமைக்கப்படவேண்டும். கருவூல வண்டிகளைச் சுற்றி நாம் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அவை நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது.” பிரஃபானு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். “இங்கே அரண்மனையிலேயே போதிய காவலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாம் காவற்படையை அமைத்துக்கொள்ள முடியும்” என்றார். “அவர்களில் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131442/