Daily Archive: May 12, 2020

சிவம் [சிறுகதை]

நித்யா சொன்னார். “இன்று காலை இவன் என்னிடம் நித்யா உங்களுக்கு அன்பென்பதே இல்லையா என்று கேட்டான்” என்றார். நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அனைவரும் என்னைப் பார்த்தனர். “இங்கே, பதினெட்டு ஆண்டுகள் இருந்த லக்ஷ்மணன் வலியங்காடி செத்துப்போன செய்தி வந்தது. நான் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். செய்தியை கேள்விப்பட்டதும் குருகுலம் மாத இதழுக்கான அஞ்சலிக் குறிப்பைச் சொல்லிவிட்டு வகுப்பை தொடர்ந்தேன். இவன் அதிர்ச்சி அடைந்துவிட்டான்”. “நேற்று இரவு என் அறைக்குள் வந்து கண்ணீருடன் இவன் கேட்டான், ‘குரு, நாளை …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131117/

போழ்வு, பலிக்கல்- கடிதம்

[வேலுத்தம்பி தளவாய்- ஆவணப்படம்] போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ போழ்வு கதை ஒரு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. ஏனென்றால் வீரநாயகர்களை எனக்கும் பிடிக்கும். நானும் சின்னவயசில் கோஷம் போட்டு அலைந்தவன். சம்பந்தமே இல்லாத இன்னொரு சூழலில் இன்னொரு வரலாற்றை படிக்கும்போது நமது பிடரியில் அடிப்பது போல தோன்றுகிறது விக்கியில் படிக்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது. கட்டப்பொம்மன், பழசிராஜா அனைவருமே பிரிட்டிஷாருக்கு கொஞ்சநாள் விசுவாசமாக இருந்தவர்கள்தான். பிரிட்டிஷார் ரொம்ப நெருக்கியபோதுதான் அவர்கள் எதிராக திரும்பியிருக்கிறார்கள். வேலுத்தம்பியும் அப்படித்தான் எல்லா மாவீரர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131354/

கடிதங்கள் பதில்கள்

  அன்புள்ள ஜெ நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் ஆவேசமாகச் சொன்னார். கோவிட் வைரஸில் மக்கள் சாகிறார்கள். பல்லாயிரம் ஏழைகள் வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்து சாகிறார்கள். அதைப்பற்றி கவலையே படாமல் இலக்கியவாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதவிரோதிகள்.நீங்கள் நினைப்பது சரிதான், அவர் ஒரு மார்க்சியர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு கேள்வி உங்கள் முன் வந்தால் எப்படி பதில்சொல்வீர்கள்? நான் அந்தக்கேள்விக்கு ஒரு பதிலைச் சொன்னேன் அது வேறு விஷயம் மகேஷ் *** …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131304/

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன் தொடர்ச்சி தான் அடுத்த கதை என்று படுகிறது. ஆனால், முறை மட்டும் மாறிவிட்டது. சீட்டு முதல் பாகம், அதன் தொடர்ச்சி நஞ்சு. சீட்டு கதையின் நாயகன் அழகப்பன் சித்தரம் தெளிவாக காட்டப்படுகிறது. அவன் அம்மா, இப்போதாவது ஆணாக நடந்துகொள் என்று சொல்லும்போது, …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131352/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–59

பகுதி ஆறு : படைப்புல் – 3 தந்தையே, என் இடப்பக்கம் மிக மெல்ல ஒரு வருகை ஒலியை உணர்ந்தேன். நத்தை ஒன்று இலைச்சருகின்மேல் படிவதுபோல நொறுங்கும் ஒலி. பொருட்கள் அடிபணிவதன் முனகலோசை. காய்ந்த கற்பரப்பின்மீது அனல் என நீர் எழ அவை பற்றிக்கொள்ளும் அரவம். திடுக்கிடலுடன் நான் திரும்பிப் பார்த்தபோது என் அருகே கடல் நின்றிருந்தது. கடலா, இங்கா, எவ்வண்ணம் என்று நான் அதை பார்த்து நின்றேன். தலைக்கு மேல் எழுந்த நீல நிற நீர்க்குன்று. …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131390/