Daily Archive: May 11, 2020

பித்திசைவு

நேற்று சட்டென்று ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது, மொட்டை மாடியில் நடந்துகொண்டிருக்கையில். harmonious madness. படைப்பூக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த வரையறை இல்லை. கட்டற்றநிலைதான், பைத்தியம்தான். ஆனால் வடிவம் என்ற ஓர் ஒத்திசைவு, அல்லது ஒழுங்குக்கு கனவையும் மனதையும் மொழியையும் பழக்கிவைத்திருப்பதனால் அது சீராக வெளிப்படுகிறது. வரலாறு நெடுகிலும் அதன் சிறுவட்டத்திற்கு வெளியே உள்ளவர்களால் அது புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அவர்களுக்கு படைப்பு என்பது அவர்கள் செய்வதைப்போல ஒரு செய்திறன் அல்லது சூழ்ச்சி மட்டும்தான். அதை அவர்கள் வியக்கிறார்கள். அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131137/

முத்தங்கள் [சிறுகதை]

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத்தான் செய்தான் மூக்கன். அவனுக்கு அது பதினெட்டு ஆண்டுகால பழக்கமும்கூட. ஆனால் ஒன்றே ஒன்று தவறிவிட்டது. அது மொத்தமாக எல்லாவற்றையும் குலைத்துவிட்டது. அதை அவனுக்கு கூத்துச் சொல்லிக்கொடுத்த வாத்தியார் மருதப்பிள்ளை பலமுறை சொல்லியிருக்கிறார்.எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று ரொம்ப துள்ளக்கூடாது, சாயம்பூசியதும் பாட்டு மறந்துவிடும்.பெரிய பெரிய வாத்தியார்கள் எல்லாம் கூத்துமேடையில் கல்லடி வாங்கியதுண்டு. திருட்டு இன்னும் பெரிய கூத்து.எல்லாம் மிகமிகச் சரியாக அமைந்துவிட்டால் சங்கிலிக்கருப்பு உள்ளே புகுந்து புறவாசலை திறந்து வைத்துவிடும். அதற்கு எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131168/

நஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை] இனிய ஜெயம் நஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இனிமையை ஏந்தி இருக்கலாம். எது மறித்தது? அவளை மன்னிப்புக் கேட்க சொல்லி காலில் விழவைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவளுக்கு இந்த நிலையை அவன் அளிப்பது … இனிமையில் திளைப்பதை விடவும், நஞ்சு பெய்வது மேலும் இனிமை கொண்ட ஒன்றா? …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131296/

பலிக்கல், லீலை- கடிதங்கள்

பலிக்கல்[சிறுகதை] அன்புள்ள ஜெ கலை ஒரு விஷயத்தை கண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு அரசியலில் சட்டத்தில் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் பெரிய மதிப்பும் இல்லை. ஆனால் கலை அதைச் சொல்வதையும் விடவில்லை. அதைத்தான் பழிபாவம் என்று சொல்கிறோம். திருவள்ளுவர் சொல்கிறார். எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு நம்பிக்கை வரவில்லை. அப்படியென்றால் இது என்ன என்றுதான் திருவள்ளுவரிடமும் கேட்போம் ஏனென்றால் இதில் நம்முடைய சொந்த லாஜிக் சரியாக பொருந்தவில்லை. கொஞ்சம் சரியாக இருக்கிறது. கொஞ்சம் வெளியே …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131298/

போழ்வு,முதல் ஆறு- கடிதங்கள்

போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ போழ்வு இந்த வரிசையில் நீங்கள் எழுதிவரும் 80 சதவீதம் வரலாறு எஞ்சியது புனைவு வகையான கதைகளில் ஒன்று. விக்கிப்பீடியாவுக்குச் சென்று வேலுத்தம்பி தளவாய் பற்றி வாசித்தேன். அவர் கேரளத்தின் தேசியவீரர். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிட குண்டரை விளம்பரம் என்ற அறிவிப்பில்தான் தேசியம் பற்றிய முதல்குறிப்பு உள்ளது. அந்த நால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இந்தக்கதையில் நீங்கள் சொல்லியிருப்பவையும் உண்மை. கிருஷ்ணபிள்ளையை அவர் கொன்ற விதம் வரலாற்றில் உள்ளது. வெள்ளைக்காரர்களுடன் நெருக்கமாக …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131294/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–58

பகுதி ஆறு : படைப்புல் – 2 தந்தையே, பேரரசி கிருஷ்ணையின் ஆணைப்படி மிக விரைவில் ஓர் அணி ஊர்வலம் ஒருங்கமைக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து அணிச்சேடியர் அனைவரும் அழைத்து வரப்பட்டு விரைந்து அணிகொள்ளச் செய்யப்பட்டனர். யானைகள் முகபடாமும் பட்டமும் அணிவிக்கப்பட்டு ஒருக்கப்பட்டன. குதிரைகள் கவசம் பூண்டன. இசைச்சூதர்களும் அந்தணர்களும் நிரைவகுத்தனர். அனைத்தையும் பூர்ணநமாம்ஷுவும் நானும் சேர்ந்து ஒருங்கிணைத்தோம். முதலில் அனைவரும் எங்கள் ஆணைகளால் திகைத்தனர். என்ன செய்வதென்றறியாது குழம்பினர். ஆனால் மிக விரைவில் அவர்கள் அதில் அமைந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131343/