Daily Archive: May 6, 2020

பலிக்கல்[சிறுகதை]

வாசலில் வந்து நின்றவரை நான் முன்னர் பார்த்திருக்கவில்லை. நாளிதழை தழைத்துவிட்டு எழுந்து “யாரு?” என்றேன். அவர் கைகூப்பி “இல்ல, பாக்கணும்னு…” என்றார். “ஆடிட்டர் அஷ்டமூர்த்தி சாரு?” “நாந்தான்” என்றேன். “என் பேரு பரமசிவம்… நமக்கு தென்காசிக்கு அந்தால புளியறை…” நான் கைகூப்பி “வாங்க” என்றேன். எதற்கு வந்திருக்கிறார் என்று புரியவில்லை. நினைவில் எங்கும் முகம் தென்படவில்லை. நான் பணியாற்றியது முழுக்க கேரளத்தில். தென்காசிப்பக்கம் தெரிந்த எவரும் இல்லை. அவர் அமர்ந்துகொண்டு “நான் ஒரு காரியமாட்டு வந்தேன்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/130851/

ஐந்து நெருப்பு,கரவு -கடிதங்கள்

ஐந்து நெருப்பு[ சிறுகதை] அன்புள்ள ஜெ, அந்த எரியும் நிலத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தச் சிறுகதைகளை என்னால் வகைப்படுத்தவே முடியவில்லை. மிக இனிமையான மொழி போன்ற கதையை வாசிக்கும்போது இலக்கியம் இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பிடி கதையை வாசிக்கும்போது இப்படி ஒரு நெகிழ்வுதான் இலக்கியம் என்று தோன்றுகிறது. எழுகதிர் வாசிக்கும்போது இந்த கவித்துவம்தான் தேவை என்று தோன்றுகிறது. ஆனால் ஐந்துநெருப்பை வாசிக்கும்போது இதுபோல அப்பட்டமான வாழ்க்கையைச் சொல்லுவதே இலக்கியம் என்று தோன்றுகிறது அந்தப்பையன் என்னவாக ஆவான்? யோசிக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131131/

நற்றுணை- கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] இனிய ஜெ. நேற்று இரவுதான் நற்றுணையை வாசித்தேன். ஒருபடியான படபடப்பு, நிலைகொள்ளாத தவிப்பு ஏதையெதையோ செய்து பார்க்கிறேன் தணியவில்லை. தூங்குவதற்கான சாத்தியமே இல்லை. சாஸ்திர விரோதமென்றாலும் பாவமில்லையென குளித்தேன் அப்பொழுது மணி இரவு ஒன்று இருபது. கொஞ்சமாக தெளிந்தபின் மீண்டும் ஒருமுறை கதையை படித்தேன். எத்தனை தெளிவான வார்த்தைகள் இதுதான்,  இது இப்படிதான் என்கிற ஆணித்தரமான நகர்வு. வரிவரியாக சிந்தித்து களைத்தேபோணேன். பெண்ணுக்கான நிமிர்வு மற்றொரு பெண்ணால் மட்டுமே, அவளோடு நிற்கும் அவளால் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131128/

“ஆனையில்லா!” , முதல் ஆறு- கடிதங்கள்

முதல் ஆறு [சிறுகதை] இனிய ஜெயம் முதல் ஆறு எனும் சொல் உள்ளே எங்கோ எவ்வாறோ விழுந்து கிடந்ததே என மனம் துழாவிக்கொண்டு இருந்தது. இன்று அதிகாலை எழுந்ததும் முதல் நினைவே முதல் ஆறு எனும் சொல்தான். சட்டென நினைவில் எழுந்து வந்தது. பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொல்லாக வரும் ஊர் முதல் ஆறு. முதல் ஆறு சங்க கிளையின் இரு உறுப்பினர்கள் kkm மீது அவர் கட்சிக்கு காட்டிய கணக்குகளை சரிபார்க்க கேட்டு …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131009/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–53

பகுதி நான்கு : அலைமீள்கை – 36 பிரதிபானு நடுங்கும் கைகளை தலைக்குமேல் கூப்பி உடைந்த குரலில் கூவினான். தந்தையே, தெய்வங்களுக்கு முன்னர் மட்டுமே மனிதர்கள் இத்தனை ஆழத்தில் தங்களை திறந்து வைக்க முடியும். தங்களுக்குத் தாங்களே பார்த்துக்கொள்ளாத இடங்கள், ஆழ்கனவுகளில் கூட தொட்டறியாத தருணங்கள் அனைத்தும் இங்கே என் நாவால் உரைக்கப்பட்டன. என்னை நீங்கள் காத்தருள வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொன்னேன். தந்தையே, இது எனக்காக அல்ல. என் மைந்தருக்காக, என் துணைவிக்காக. எளியவன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131125/