அன்புள்ள ராஜகோபாலன்
வாயுக்கோளாறு வாசித்தேன். நல்ல கதை. ஒரு எளியவேடிக்கைக் கதையாக இதை எழுதியிருப்பீர்கள் என்ற எண்ணத்தைத் தலைப்பு உருவாக்குகிறது. ஆனால் மொத்தக்கதையும் ஒரு குணச்சித்திரத்தில் மையம் கொள்ளும்போது கதை மேலே செல்கிறது.
கணபதியின் முழு வாழ்க்கையும் மரணத்திலிருந்து தப்புவதற்கான விழைவே. அவரது கல்வி தேடல் எல்லாம் அதுவே. மரணத்தை வாயுவாக்கி வாயுவை வாழ்க்கையாகவும் பிரபஞ்சமாகவும் விளக்கிக்கொண்டு அவர் விரித்துக்கொள்ளும் வாழ்க்கையின் முழுமையான அபத்தம் கதையில் வந்துள்ளது. அதனாலேயே இது முக்கியமான கதை
இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட விஷயம்தான் மரணத்தின் முன் நாம் கொள்ளும் பாவனைகளின் அபத்தம். ஆனாலும் மீண்டும் சொல்ல நிறைய இருக்கிறது. கணபதியின் ‘ஞானம்’ போன்றதே ஒவ்வொருவரும் சேர்த்து வைத்திருக்கும் அறிவும். அது எப்போதும் எதுவோ ஒன்றுக்கான எதிர்வினைதான். இளமையில் சந்தித்த அவமதிப்புக்கு, இழப்புக்கு, மரணத்துக்கு. அவ்வகையில் எல்லா ஞானமும் எங்கோ அபத்தமாக ஆகிவிடும்தான்
கதையின் சிக்கல் என்னவென்றால் அதன் குறியீட்டுத்தன்மை இன்னும்கூட விரிவடையவில்லை என்பதே. வாயு என்பதை பலவாறாக ஆக்கியிருக்கமுடியும். ஆகவே கதை வாசித்ததுமே முடிந்துவிடுகிறது என்ற உணர்வு உருவாகிறது
வாழ்த்துக்கள்
ஜெ
கதைகள்
12. பயணம் . சிவேந்திரன் sivendran@gmail.com
11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் drsuneelkrishnan@gmail.com
10. வேஷம் பிரகாஷ் சங்கரன் drsuneelkrishnan@gmail.com>
9. கன்னிப்படையல் ராஜகோபாலன் rajagopalan.janakriraman@iciciprulife.com
8. சோபானம் ராம்
7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்
6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் rajagopalan.janakriraman@iciciprulife.com
5. பீத்தோவனின் ஆவி வேதா
4. தொலைதல் ஹரன் பிரசன்னா haranprasanna@gmail.com
3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் suren83@gmail.com
2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி essexsiva@gmail.com
1. உறவு தனசேகர் vedhaa@gmail.com