அண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்

ஜெ CNN-IBN and NDTV மாதிரி செய்தித்தாள்களையும் அருந்ததி மாதிரியான பத்தி எழுத்தாளர்களையும் வாசிக்கும் என் நண்பன் அவர்களெல்லாம் ஆய்வுசெய்து எழுதுகிறார்கள் என்று சொல்கிறான். அவர்கள் அரசியல்ரீதியாக யோசித்துத் திறமையாகப் பேசுவதாக மெச்சுகிறான். உங்களுடைய கட்டுரைகளில் புள்ளிவிவரங்கள் குறைவு என்று சொல்கிறான். இதை நான் ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்

ஹரிகிருஷ்ணன்

அன்புள்ள ஹரி,

ஒன்றை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த ஊடக அரசியலாய்வாளர்களை ஒரு சாதாரண அரசியல்கட்சிப்பேச்சாளன் வரும்போது எளிதாகத் தட்டி நொறுக்கிவிட்டுச் செல்வான். அது ஒன்றும் பெரியவிஷயமே அல்ல. புள்ளிவிவரங்களைத் திரட்டி அவற்றைக்கொண்டு வாதங்களை உருவாக்குவதும் , சொத்தை வாதமென்றால் நிறைய தர்க்கங்களை வரிவரியாக அடுக்குவதும், ஒரு நல்ல வாதத்தைச்சுற்றி பலவீனமான வாதங்களை நிறுத்தி வைத்து இவற்றுக்கும் வலுவேற்ற முயல்வதும், தெளிவாகப் பேசமுடியாதபோது ஐயங்களைக் கண்டுபிடிப்பதும் எல்லாமே அரசியலியக்கங்களில் பயிற்சிபெற்றவர்களுக்கு மிக எளிதாகப் பயிற்றுவிக்கப்படுபவை நானும் ஒரு மிக முக்கியமான அரசியலியக்கத்தில் மிக இளமையிலேயே அதன் தலைமைநோக்கிச் செல்வதற்கான பயிற்சியைப் பெற்றவன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நானேதான் அதை உதறினேன். என் 21 வயதுமுதல் ஒரு வாரத்துக்கு அச்சில் பத்துப்பக்கம் அளவுக்கு இத்தகைய கட்டுரைகளை எழுதி பிரசுரித்துத் தள்ளிக்கொண்டிருந்தவன். அப்படிப் பல ஆயிரம் பக்கங்கள் . அத்தகைய வாதங்கள் எதிர்வாதங்கள் மேல் மிகப்பெரிய சலிப்பு எனக்குண்டு. அவற்றுக்கும் வழக்கறிஞர்களின் வாதங்களுக்கும் வேறுபாடில்லை. அவற்றின் நோக்கம் உண்மை அல்ல. இக்கட்டுரைகள் , இந்த விவாதங்கள் எவற்றையும் நம் சாமானிய வாசகனைப்போல என்னால் அப்படியே விழுங்கமுடியாது. இந்தக் கட்டுரைகளை வாசித்ததுமே இவற்றின் மைய நரம்பைத் தொட்டுப்பார்க்கும் பயிற்சி என்பது அவ்வாறு வந்ததே. மிஷனரி-சீன வழக்குரைஞரான அருந்ததியின் கட்டுரையை வாசித்ததுமே அது எடுத்துக்கொண்டுள்ள ‘போர்த்தந்திரம்’ , அதற்காக அது சொற்களை உருவாக்கிக்கொண்டுள்ள விதம் எல்லாமே என் முன் அப்பட்டமாகக் கிடக்கின்றன. அதற்கு அதே மொழியில் ஒரு கட்டுரையை எழுதியிருப்பேன், இருபத்தொரு வயதில் . இப்போது சலிப்புதான் எழுகிறது. அவற்றுக்கு எந்த அர்த்தமும் இல்லை. CNN-IBN மற்றும் NDTV யின் அத்தனை வாதங்களுக்கும் ஒரே பதில்தான். அதை என் குழும விவாதத்திலேயே ஒரு நண்பர் சொல்லியிருந்தார். காங்கிரஸ் அரசின் மாபெரும் ஊழல்களில் கூட்டுக்களவாணிகள் அவர்கள். சி.ஏ.ஜியால் அரசு அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்டுகளை முறைகேடாக அளித்துள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள். ஊடக பலத்தால் அந்த ஊழலை மறைத்துக்கொண்டிருப்பவர்கள். [பார்க்க http://indiatoday.intoday.in/site/story/games-contracts-to-media-houses-arbitrary-and-biased-cag-report/1/147735.html] அந்த ஒரு வரிதான் அவர்களுக்கான பதில் . அவர்கள் சொல்லும் பக்கம்பக்கமான ஆய்வுகள், தகவல்களுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லவேண்டும் என்றே நான் யோசிப்பேன். நான் என் கட்டுரைகளில் மையமாக முன்வைப்பது சிந்தனைக்கான கோணங்களை மட்டுமே. எந்த விஷயத்தையும் முழுமையாகவும் தர்க்கபூர்வமாகவும் நேர்மையாகவும் அணுகுவதற்கான ஒரு வழியை மட்டுமே. அப்படி அணுகுவதே முக்கியம். புள்ளிவிவரங்கள் அல்ல. அவை மிகமிக எளிமையாக எப்படி வேண்டுமானாலும் கையாளப்படக்கூடியவை. என்னுடைய கோணம் உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம். அதற்கான அவசிய தகவல்களை மட்டுமே நான் சொல்வேன். அந்தக்கோணத்தைப் புரிந்துகொள்பவர்கள் எளிதாக தகவல்களை அடைய முடியும். ஆம், நான் எழுத்தாளனாகவே இவற்றைச் சொல்கிறேன். அரசியல்ஆய்வாளனாக அல்ல. நான் சலித்து வெறுத்து உதறிவிட்டு வந்த பேனா அது.இருபத்தைந்து வருடம் முன்பு.

ஜெ

அண்ணா போராட்டமும் அடித்தள மக்களும்

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

லோக்பால் போதுமா?

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

அண்ணா ஹசாரே -கடிதங்கள்

அண்ணா இன்றைய பேச்சுவார்த்தைகள்

அண்ணா ஹசாரே-மீண்டும் ஒரு கடிதம்

அண்ணா ஹசாரே-இன்னொரு கடிதம்

அண்ணா -கடிதங்கள்

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரே இணையதளம்

அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்

 அருந்ததி

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா போராட்டமும் அடித்தள மக்களும்
அடுத்த கட்டுரைஅருந்ததியின் பொய்கள்