சியமந்தகம் தளத்தில் சுசித்ரா எழுதிய நீண்ட கட்டுரையை வாசித்து முடித்ததும் ஓர் ஆழமான குழப்பமும் நிறைய சிந்தனைகளும் ஏற்பட்டன. நான் ஏற்கனவே இதைப்பற்றிச் சிந்தித்தது உண்டு. ஓர் ஆண் அவனுடைய ஆண்தன்மையை கூர்தீட்டிக்கொண்டு மேலே போய் அடையும் ஒரு நிலை உண்டு. அதை ஸ்பிரிச்சுவல் பக்கம் நிறையவே பார்க்கலாம். பெரும்பாலான மாஸ்டர்கள் ஒருவகையான மேச்சோக்கள்தான். அவர்கள் சாமியார்களாக இருப்பதே அவர்களின் மேச்சோ தன்மையால் அவர்களால் பெண்களின் உலகத்திற்குள் நுழையவே முடியாது என்பதனால்தான். பெண்ணியம் என்றெல்லாம் பேசி பெண்களுக்கு நெருக்கமாக இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும் குழைவானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சலிப்பூட்டுகிறார்கள். அந்தக் கட்டுரை பல தைரியமான கேள்விகளை முன்வைக்கிறது. அதுவே ஒரு ஃபெமினிஸ்ட் கட்டுரைதான். ஃபெமினிசம் முதிர்ந்தபின் ஆண்களை நிமிர்வுடன் பார்க்கிற பார்வை என நினைக்கிறேன். மற்றபடி சொல்லத்தெரியவில்லை. நல்ல கட்டுரை