கவிதைகள் இதழ், ஐந்து கவிஞர்கள்

அன்புள்ள ஜெ,

இம்மாத கவிதைகள் இணைய இதழ், ஐந்து இளம் கவிஞர்களின் சிறப்பிதழாக வெளிவருகிறது. பெரு விஷ்ணுகுமார், வே. நி. சூர்யா, ச. துரை, றாம் சந்தோஷ் மற்றும் நிலாகண்னன் ஆகியோரின் புதிய கவிதை தொகுப்பிலிருந்து கவிதைகளை தேர்வு செய்து நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள்.

புத்தகத் திருவிழா நடைபெரும் இம்மாதம் நண்பர்கள் இக்கவிஞர்களின் புதிய தொகுப்பை வாங்கி வாசிக்க இந்த அறிமுகம் உதவியாய் இருக்கும்.

 

பெரு விஷ்ணுகுமார் – அசகவ தாளம், காலச்சுவடு வெளியீடு
பெரு விஷ்ணுகுமார் இணையப்பக்கம்

வே நி சூர்யா – அந்தியில் திகழ்வது, காலச்சுவடு வெளியீடு
வே.நி.சூர்யா இணையப்பக்கம்

ச. துரை – சங்காயம் ,  எதிர் வெளியீடு
ச.துரை பக்கங்கள்

றாம் சந்தோஷ் – இரண்டாம் பருவம் , எதிர் வெளியீடு

றாம் சந்தோஷ் இணையப்பக்கம்

 

நிலாகண்ணன்- பியானோவின் நறும்புகை , படைப்பு பதிப்பகம் வெளியீடு
நிலாக்கண்ணன் அறிமுகம்

ஒரு இதழுக்கு அதிகபட்சம் ஐந்து கவிஞர்களின் கவிதைகள் என முடிவெடுத்துள்ளதால் மேலும் புதிதாக வந்திருக்கும் சில கவிஞர்களின் தொகுப்பு குறித்து இம்மாத இதழில் வெளியிட முடியவில்லை. தொடர்ந்து வரும் மாதங்களின் புதிய கவிஞர்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படும்.

ஆனந்த் குமார்

ஆசிரியர்

கவிதைகள் இணைய இதழ்

கவிதைகள் இணைய இதழ்

முந்தைய கட்டுரைTHE STORY OF EKOLU
அடுத்த கட்டுரைஅருண்மொழி நங்கை விழா- உரைகள்