வெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.  மே 8, 2021 ஆரம்பித்த வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் பணி ஐந்து மாதங்களாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர்  நாங்கள் குறிப்பிட்ட அதே வாக்கியம்தான். அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் தொடர்பு எண் ஒலித்துக்கொண்டே  உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு அமெரிக்க மாநிலத்திலிருந்து, உலகின் ஏதாவது வேறு ஒரு நகரத்திலிருந்து நண்பர்கள் அழைத்து, திரையிடலை ஒருங்கமைப்பதற்கான தேவைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் கேட்டு அறிந்தவண்ணம் உள்ளனர். லண்டனில் திரையிட,  வெண்முரசு வாசக நண்பர்கள் வாட்ஸப் குழுமம் ஆரம்பித்து, ஆலோசனைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். அக்டோபர் மாதத்தில் லண்டனில் ஆவணப்படத்தைப் பார்க்கலாம் என உங்கள் நாட்குறிப்பில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்

இந்த மாதம் சிகாகோ-வில் திரையிடலுக்கான ஏற்பாடு  செய்துள்ள நண்பர்கள் இப்பெரும் மாநாகரிலிருந்து 200-240 மைல் (மூன்று / நான்கு மணி நேரப் பயணம்) தூரத்தில் வசிப்பவர்கள். அனைவரும் ஓர் இடத்தில் இணைந்து விழாவென கொண்டாடும்படி மத்தியமாக சிக்காகோவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

செப்டம்பர் 26, 2021 – ஞாயிற்றுக்கிழமை, 2:45 PM CST, சிகாகோ
Cinemark at Seven Bridges and IMAX
6500 IL-53, Woodridge, IL 60517

தொடர்புக்கு –
பாலா நாச்சிமுத்து, hibalu@gmail.com, Phone – 1-608-471-0190
ஜமீலா கணேசன், ishrajganesan@gmail.com, Phone – 1-309-533-0337

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

vsoundararajan@gmail.com

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன் பேட்டிகள்
அடுத்த கட்டுரைஇலக்கிய நிதிவசூல்கள்