சிறுகதை -ஓர் அறிவிப்பு

dog

 

இந்தத் தளத்தில் நிகழும் சிறுகதை விவாதத்தில் கடிதங்களை அனுப்புபவர்கள் ஆன்லைன் கூகிள் டிரான்ஸ்லிட்டெரேட்டரில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டாம். அது சொற்றொடர்களை உடைப்பதில்லை. மொத்தக்கடிதத்தை வார்த்தை வார்த்தையாக மறு அமைப்பு செய்யாமல் என் தளத்தில் பதிவுசெய்ய முடியாது. பெரும் பணி அது. என்.எச்.எம் போன்ற நிரலிகளைக்கொண்டு எம்.எஸ் வேர்ட் போன்ற பக்கங்களில் தட்டச்சு செய்து வெட்டி ஒட்டியோ இணைத்தோ அனுப்பவும்.

 

இது சிறுகதைப்போட்டி அல்ல. ஏராளமானவர்கள் தங்கள் சிறுகதைகளை அனுப்புகிறார்கள். நான் நாளும் வெண்முரசு எழுதவேண்டும். வாசிக்கவேண்டும். இதற்கப்பால் கடுமையான திரைப்படப்பணிகள் – நான்கு பெரியபடங்கள். இச்சூழலில் கதைகளை வாசிப்பது எனக்கு இயலாதது

 

இங்கே வெளியாகும் கதைகளை நிறைய வாசிக்கும் என் நண்பர்களைக் கொண்டு இணையத்திலிருந்து தெரிவுசெய்திருக்கிறேன். வேறு இதழ்களில் வெளியான , பேசப்பட்ட, கதைகள் மட்டுமே இங்கே சுட்டி அளிக்கப்படுகின்றன. 10 கதைகள். அவை முழுமையாகத் தெரிவாகிவிட்டன.

 

ஜெ

முந்தைய கட்டுரைபேலியோ
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28