அம்மனும் சித்தரும் அருகிருக்க…

ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே ஆனது இரண்டாம் வகை. நகுலன் நவீனனுமாக ஆனது மூன்றாம் வகை நாஞ்சில்நாடனின் கதைகளில் கடைசியாக வந்தமைந்த தொடர்கதைத்தலைவர் கும்பமுனி. இப்போது நாஞ்சில்நாடன் என்றபேரில் வரும் கதைகளை பெரும்பாலும் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/129907/

கிருமி [சிறுகதை] உமையாழ்

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி உங்களது உடல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த வைத்தியசாலையின் வாசலில் எங்களுக்கான கடைசி நம்பிக்கைகளை இறுகப் பிடித்தவர்களாக நின்றிருந்தோம். கண்களில் கருணை உள்ளவர் எவரையாவது எங்கள் மீதுசாட்டு ரஹ்மானே என்கிற வேண்டுதல், தகிக்கும் உள்ளத்தைத் தாண்டி வார்த்தைகளாக பொரிந்து கொண்டிருந்தது.   கிருமி – உமையாழ்

Permanent link to this article: https://d.jeyamohan.in/132135/

புதிய கதைகள்- கடிதங்கள்

வில்லுவண்டி[ சிறுகதை] தனா அன்புள்ள ஜெ வில்வண்டி சிறுகதையின் வடிவம் அதற்கு அபாரமான அழகைக் கொடுக்கிறது. மிகையான உணர்ச்சிகள் இல்லை. விரிவான சித்தரிப்புகள் இல்லை .இயல்பான ஒழுக்கு. வில்வண்டிக்காகத்தான் அவள் செந்தட்டியை திருமணம் செய்துகொள்கிறாள். செந்தட்டி அவளை சிவப்பு நிறத்துக்காக மட்டும்தான் திருமணம் செய்துகொள்கிறாள். சமூக அந்தஸ்து, கலர் ரெண்டும்தான் திருமணத்தை அங்கே முடிவுசெய்கின்றன. அவ்வளவுதான், அதுக்குமேலே அங்கே ஒன்றுமில்லை. அதன்பின் அவர்கள் அன்பாக வாழ்ந்திருக்கலாம். அவர்கள் பிள்ளைபெற்றிருக்கலாம். அதெல்லாம் வேறுவிஷயம். அவர்களின் வாழ்க்கையின் சாராம்சம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132441/

உஷ்ணம் – கடிதங்கள்

உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ் அன்புள்ள ஜெ நலம்தானே? சித்துராஜ் பொன்ராஜ் பற்றி முன்னரே எழுதியிருந்தீர்கள். அந்தத் தொகுதி படித்தேன். அவருடைய எழுத்தின் முக்கியமான அம்சம் அதன் நவீனத்தன்மைதான்.சாதாரணமாக தமிழ் வாழ்க்கையில் எழுதப்படாத நவநாகரீக நகர்சார்ந்த வாழ்க்கையின் சித்திரங்களை அவர் கதைகளில் காணமுடிகிறது.அவை ஆர்ப்பாட்டமாகச் சொல்லப்படாமல் சுருக்கமாக நவீனமொழியில் சொல்லப்படுகின்றன. பலவிதமான வாழ்க்கைகள். நான் இந்த கதையையும் அவருடைய எல்லா கதைகளின் பொதுவான பகைப்புலத்திலேயே வைத்துப் பார்க்கவிரும்புகிறேன். இந்தக்கதையைப் பற்றி இப்படிச் சொல்கிறேன். அவருடைய கதைகளின் பொதுவான …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132438/

நற்றுணை போழ்வு- கடிதங்கள்

 நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஜெ   நற்றுணை கதையை முழுசாக வாசிக்க இரண்டு வாசிப்பு தேவைப்பட்டது. ஏராளமான வரலாற்றுக்குறிப்புகள். ஏராளமான நுண்ணிய செய்திகள். டதி போன்ற ஆளுமைகள் ஒருபக்கம் சைக்கிள் போன்ற கருவிகள் இன்னொருபக்கம். ஐடியாலஜியும் டெக்னாலஜியும் ஒன்றுசேர்ந்து விடுதலையை உருவாக்குகின்றன. ஆனால் எல்லாவற்றையும் இணைக்கிறது யட்சி என்ற அந்த கிறுக்குநிலை. அதுதான் கனவு. அந்தக்கனவின் கதை இது   சிவக்குமார் எஸ்   அன்புள்ள ஆசான்,   ‘மதுரம்’ல் இருந்த அதே இனிமை ‘நற்றுணை’ கேசினியில் உணர முடிந்தது. இவ்வளவு இனிமையான நம்பிக்கை …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/131854/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–80

பகுதி ஏழு : நீர்புகுதல் – 9 நான் பலராமரின் மஞ்சத்தறைக்கு முன் சென்று நின்றேன். வாயிலில் அவருடைய இரு மைந்தர்களும் நின்றிருந்தனர். நிஷதன் உளம் கலங்கியதுபோல் தோள்கள் தொய்ந்து, கைகள் தளர்ந்து, தலைகுனிந்து நின்றிருந்தார். உல்முகன் என்னிடம் “தந்தை எவரையும் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பார்க்க விரும்பியபோதுகூட உளம் ஒருங்கவில்லை” என்றார். “நான் அவரிடம் சில சொற்கள் சொல்லவேண்டும்” என்று சொன்னேன். சில கணங்களுக்குப் பின் உல்முகன் “அவர் முடிவெடுத்துவிட்டார். எவர் சொல்வதையும் அவர் கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132413/

இலக்கிய அபிப்பிராயம் சொல்வது …

  இலக்கியப்பேச்சுக்களில் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி உண்டு, இலக்கியப் படைப்பாளிகள் ஏன் அவர்களின் எழுத்துக்கள் மீதான கருத்துக்களைக் கண்டு எரிச்சல் கொள்கிறார்கள்? அவ்வாறு எரிச்சல்கொண்ட எழுத்தாளர்களின் ‘முதிர்ச்சியின்மை’ பற்றிய புகார்களாகவே இந்தக் கேள்விகள் எழுகின்றன. எழுத்தாளர்களிடம் முதிர்ச்சியின்மை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. முதிர்ந்துவிட்டால் அவன் ஏன் எழுதவருகிறான்? எழுதுவதென்பதே ஒரு நிலைகுலைவைச் சரிசெய்வதற்காகத்தான். எழுத்தாளனிடம் எப்போதுமே படபடப்பும், நிலைகொள்ளாமையும் இருக்கும். நான் இதுவரை சந்தித்த எழுத்தாளர்களிலேயே நிதானமானவர்கள் சுந்தர ராமசாமியும் நாஞ்சில்நாடனும்தான். அவர்களிடம் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132394/

நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

  வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும் பீடித்தவர்கள் உட்பட பக்தர்களும் வந்துசேர பூமியில் இருள் பூக்கத்தொடங்கியிருக்கும். நெடுநிலத்துள் – அகரமுதல்வன்

Permanent link to this article: https://d.jeyamohan.in/132132/

வில்வண்டி- கடிதங்கள்

வில்லுவண்டி[ சிறுகதை] தனா அன்புள்ள ஜெ, தனா எழுதிய கதையை முன்பே படித்திருந்தேன். என்னுடைய ஊரைச் சேர்ந்த கதை. ஓரளவு கள்ளிக்காட்டு இதிகாசத்தை நினைவுபடுத்தும் கதைச்சூழல். நல்லகதை. இதை வாசிக்கும்போதுதான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன என்று தெரிகிறது. ஆசிரியரே உணர்ச்சிவசப்பட்டு கதைசொல்வதுபோன்ற அந்த மொழி கதைமுழுக்க ஆசிரியரே இருப்பதுபோல தோன்றவைக்கிறது. இந்தக்கதையில் அந்த அம்சம் இல்லை. ஆசிரியர் ஒரு குரலாக எங்கேயும் இல்லை. இந்தவகையான கதைகள் எந்த அளவுக்கு உணர்ச்சியில்லாமல் சொல்லப்படுகின்றதோ அந்த அளவுக்கு நல்லது …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132345/

உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ, அனோஜனின் கதையை வாசித்தபோது உருவான ஒவ்வாமை என்பது அந்த பேசுபொருள் சார்ந்தது. ஒவ்வாமையை உருவாக்கும் விஷயங்களை எப்போதுமே எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறர்கள். ஒவ்வாமையை உருவாக்குபவை என்ன என்று பார்த்தால் அவை பெரும்பாலும் taboo சம்பந்தமானவை. அல்லது பெரிய வீழ்ச்சிகள் சம்பந்தமானவை. Taboo என்பவை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சடங்காச்சாரங்கள் அல்லது ஒழுக்கநெறிகள் என்று தோன்றும். ஆனால் அவற்றுக்கு அடியில் தத்துவார்த்தமான ஒருவிஷயம் உள்ளது. அந்த தத்துவம் வரைச் சென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://d.jeyamohan.in/132390/

Older posts «